April 29, 2024

ஜெயிலருக்கு நாள் குறித்த லியோ ..!! அசரவைக்கும் நாலாவது நாள் வசூல் ..!! மீண்டும் “பாக்ஸ் ஆபீஸ் கிங்” என்று நிருபித்த விஜய் ..!!

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் அதில் “பாக்ஸ் ஆபீஸ் கிங்” என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய் மட்டும் தான்.  காரணம் இவருடைய ஒவ்வொரு படங்களும் வசூலில்  புதிய புதிய சாதனைகள் செய்யும் . அப்படி இதுவரை இருந்த எல்லா ரெக்கார்டுகளையும் முறியடித்த விஜய் தற்போது புதிய சாதனை படைக்க இருக்கிறார் . அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,

இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ.  மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்க்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் என்னதான் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள்,

வந்தாலும் கூட , வசூலில் உச்சத்தை தொட்டு வருகிறது லியோ திரைப்படம் . அந்த வகையில் முதல் நாளிலேயே 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது லியோ திரைப்படம் . மேலும் லியோ திரைப்படம் சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது என்று பலரும் ,

கூறி வந்தனர் . ஆனால் தற்போது ஜெயிலர் படத்திற்கு நாள் குறித்துள்ளார் நடிகர் விஜய் . அந்த வகையில் நான்கு  நாட்களில் 392 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது லியோ  திரைப்படம் . மேலும் ஆயுத பூஜையான இன்றும் , விஜயதசமியான நாளையும் விடுமுறை என்பதால்,

இந்தப் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது . இன்னும் சொல்லப் போனால் இந்த இரண்டு நாட்களில் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படம் முறியடித்து விடும் என்று சினிமா வட்டராத்தில் பேசப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *