April 28, 2024

துணிவு படத்தின் வாழ்நாள் சாதனையை ..!! மூன்றே நாளில் முறியடித்த லியோ ..!! அடுத்த டார்கெட் ஜெயிலர் தானா ..?? தளபதினா சும்மாவா ..??

கடந்த வியாழக்கிழமை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . ஏற்கனவே விஜய் -லோகேஷ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதனால் இரண்டாவது முறையாக இருவரும் கூட்டணி அமைத்தனர். இந்த படத்தில்  இரட்டை வேடத்தில் நடித்து அசத்திய விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத்,

திரிஷா, அர்ஜுன் ,கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் ,மன்சூர் அலிகான் ,பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் ,பாபு ஆண்டனி போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றாலும் கூட  வசூலில் ,

பிரம்மாண்ட சாதனை படைத்து வருகிறது.  அந்த வகையில் முதல் நாளிலேயே 148 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது .  அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய்யின் சக போட்டியாளரான அஜித்தின் துணிவு படத்தின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளது லியோ திரைப்படம் .

அந்த வகையில் கடந்த பொங்கலுக்கு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு . இந்த திரைப்படம் மொத்தமாக 200 இல் இருந்து 250 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது . இந்நிலையில் இதை மூன்றே நாளில் முறியடித்துள்ளது லியோ திரைப்படம்.  அதாவது ,

மூன்றே நாளில் லியோ திரைப்படம் 280 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம் . இதனால் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையையும் லியோ திரைப்படம் முறியடித்து விடும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *