May 1, 2024

வெள்ளை உடையில் தேவதை போல மின்னும் மீனா ..!! 2024 புத்தாண்டு ஸ்பெஷல் புகைப்படங்கள் ..!!

மீனா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா தொடர்ந்து பல மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.  பின்னர் தமிழில் வெளியான என் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மீனா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எஜமான், சேதுபதி ஐபிஎஸ் ,

வீரா, நாட்டாமை ,முத்து, அவ்வை சண்முகி , பாரதி கண்ணம்மா ,பொற்காலம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை மீனா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும்,

கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே வித்யசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா . ஆனால் அவருடைய கணவர் கடந்த 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.

மேலும் கணவரின் இறப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்த மீனா பழைய நிலைக்கு திரும்பி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.  இப்படி இருக்கும் நிலையில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டில் அழகிய உடையில் போஸ் கொடுத்திருக்கிறார் மீனா .

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கெல்லாம் வயசே ஆகாதா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *