April 25, 2024

ரஜினி ஒரு சங்கி தான் ..!! அதற்கு ஆதாரம் இது தான் ..!! லிஸ்ட் போட்டு வறுத்தெடுத்த பிரபலம் ..!!

நேற்று முன் தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.  மேலும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரோடு இணைந்து விஷ்ணு விஷால் , விக்ராந்த் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர் . லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ,

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா , என்னுடைய அப்பா சங்கி கிடையாது.  அவரை சங்கி என்றும் சொல்லும்  போது  எனக்கு கோபம் தான் வரும் .

அவர் ஒரு சங்கியாக இருந்திருந்தால் கண்டிப்பாக லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் . அதனால் அவர் சங்கி  கிடையாது என்று கூறியிருந்தார்.  இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் சங்கி இல்லை என்றால் இதெல்லாம் என்ன.?

என்று லிஸ்ட் போட்டு வறுத்தெடுத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன் . அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் சூப்பர் ஸ்டார் சங்கி என்பதை அவர் நிரூபிப்பதற்காக எதற்கெல்லாம் ஆதரவு கொடுத்தார் , எதற்கெல்லாம் ஆதரவு கொடுக்கவில்லை என்பதை லிஸ்ட் போட்டு ,

தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அந்த பதிவு தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ரஜினியை சங்கி சொல்ல இந்த ஒரு பதிவு போதும் என்றும் கூறிவருகின்றனர் …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *