May 3, 2024

புகுந்த வீட்டுக்கு போகப்போகும் மகள் ..!! ஆசையாக மகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த ரோபோ சங்கர் ..!!

தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரோபோ சங்கர் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்  ரோபோ சங்கர் . பின்னர் படங்களிலும் நடிக்க தொடங்கினார் . அப்படி தமிழில் வெளியான இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும்,

மாரி ,வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் ,கடவுள் இருக்கான் குமாரு, வேலைக்காரன் ,கலகலப்பு 2 ,இரும்புத்திரை , விஸ்வாசம் போன்ற பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் ரோபோ சங்கர் . மேலும் ரோபோ சங்கருக்கு,

திருமணமாகி இந்திரஜா சங்கர் என்ற மகளும் இருக்கிறார் . இவர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர்  இந்த படத்தைத் தொடர்ந்து பாகல் , விருமன் போன்ற படங்களிலும் நடித்திருந்த இந்திரஜாவுக்கு விரைவில்,

திருமணம் நடக்க உள்ளதாம்.  இப்படி இருக்கும் நிலையில் இவருக்கும் அவருடைய முறை பையனுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது . அப்போது மகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார் ரோபோ சங்கர் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *