April 28, 2024

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு ..!! ஆணழகன் போட்டியில் கலந்துக்கொண்ட ரோபோ சங்கர் ..!! விமர்சனங்களை தாண்டி விஸ்வரூபம் எடுத்த நடிகர் ..!!

ரோபோ சங்கர் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட காமெடி நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருந்து வந்தார் ரோபோ சங்கர் . இப்படி தன்னுடைய காமெடியால் ரசிகர்களைக் கவர்ந்த ரோபோ சங்கருக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு அமைந்தது.  அப்படி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில்,

நடித்து வந்தாலும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ,வாயை மூடி பேசவும் , மாரி ,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், வேலைக்காரன் ,கலகலப்பு 2 ,மாரி 2 , விஸ்வாசம் போன்ற பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியிருந்தார  நடிகர் ரோபோ சங்கர்.

மேலும் இவருக்கு அழகே அவருடைய குண்டான உடம்பு தான் . இப்படி இருந்த நிலையில் சமீபத்தில் உடல் எடையை பாதியாக குறைத்தார் ரோபோ சங்கர் . இதைப் பார்த்த பலரும் ரோபோ சங்கருக்கு நோய் வந்துவிட்டது என்றும் , அவரால் எழுந்து கூட நடக்க முடியவில்லை என்றும்,

இனி ரோபோ சங்கர் அவ்வளவுதான் என்றும் கூறி வந்தனர் . இதையெல்லாம் பார்த்தும் மனம் தளராத ரோபோ சங்கர் தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் .  மேலும் ஏற்கனவே பாடி பில்டராக இருந்து வந்த ரோபோ சங்கர் 23 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆணழகன்,

போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.  இதைப் பார்த்த பலரும் பழைய ரோபோ சங்கர் திரும்பி வந்துட்டாருன்னு சொல்லு என்று கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *