April 29, 2024

அஜித்துக்கு தண்ணி அடிக்கிற பழக்கமே கிடையாது ..!! அடிச்சு சொல்லும் பிரபல நடிகை ..!! இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ..??

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் சொன்னது போல தனிவழியில் பயணித்து வருபவர் நடிகர் அஜித் மட்டும் தான் . ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து வந்த அஜித் அமராவதி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் .  பின்னர் தொடர் தோல்வி படங்களை கொடுத்தாலும் தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் நடிகர்  அஜித் .

மேலும் இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் . இந்த படத்தை முடித்த,

கையோடு மார்க் ஆண்டனி படத்தில் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித்.  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித்துக்கு தண்ணி அடிக்கிற பழக்கமே இல்லை என்று கூறியுள்ளார் பிரபல நடிகை ஒருவர் .

அவர் வேறு யாருமில்லை நடிகை கஸ்தூரி தான் . அந்த வகையில் பழைய பேட்டி ஒன்றில் நடிகை கஸ்தூரி அஜித் பற்றி கூறியதாவது , தமிழ் சினிமாவின் தண்ணி அடிக்காமல் இருக்கும் நடிகர்கள் ஒரு சிலர் மட்டும்தான்.  அதில் எனக்கு தெரிந்து அஜித் மற்றும் ஹிந்தி நடிகரான

அபிஷேக் பச்சன் தண்ணி அடிக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார் நடிகை கஸ்தூரி . ஆனால் நடிகர் அஜித் பல திரைப்படங்களில் சரக்கு அடிக்கும் காட்சியின் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *