April 29, 2024

அப்பாவி கணக்கா இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா ..?? அட, இவர் தரமான நடிகர் மற்றும் இயக்குனராச்சே ..?? யாருன்னு நீங்களே பாருங்க ..!!

ரமேஷ் அரவிந்த் ஓர் பிரபலமான இந்திய திரைப்பட நடிகர் , இயக்குனர் மற்றும் தொகுப்பாளர் ஆவார் . கன்னடா படங்கள் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகர்  ரமேஷ் அரவிந்த் . பின்னர் கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார்,

நடிகர் ரமேஷ் அரவிந்த் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உன்னால் முடியும் தம்பி, பெண்மணி அவள் கண்மணி, கேளடி கண்மணி ,இதய வாசல் ,மகராசன் ,சதிலீலாவதி ,பாட்டு வாத்தியார் , பஞ்சதந்திரம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்  நடிகர் ரமேஷ் அரவிந்த் .

குறிப்பாக இவர் கமல்ஹாசன் உடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் நடிகர் ரமேஷ் அரவிந்த் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

இப்படி ஒரு தரமான நடிகராக கலக்கி கொண்டு வந்த ரமேஷ் அரவிந்த் உத்தம வில்லன்,  பாரிஸ் பாரிஸ் போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் . இதனிடையே அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர் ரமேஷ் அரவிந்த் .

திருமணமான இவர்களுக்கு ஒரு மகள்,  ஒரு மகன் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பாத்திடாத நடிகர் ரமேஷ் அரவிந்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *