April 29, 2024

அடு த்த பட த்திற் காக காட் டுவா சி போ ல மாறி ய விஜய காந் தின் மக ன் ..!! வெ ளிவந் த புகை ப்ப டங் கள் ..!!

கேப்டன் விஜயகாந்த் ஓர் தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . ஆரம்பத்தில் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த கேப்டன் ஒரு கட்டத்தில் அரசியலிலும் களம் இறங்கி வெற்றியை கண்டார் . ஆனால் யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை , திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்  கேப்டன் விஜயகாந்த்  அவர்கள் . மேலும் அவர் மீண்டும் குணமாகி எங்களை ,

பார்க்க வரவேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் . இதனிடையே கடந்த 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகர்  விஜயகாந்த் . திருமணமான இவர்களுக்கு விஜய் பிரபாகர் , சண்முக பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் .  இதில் சண்முக பாண்டியன்,

விஜயகாந்தை போல தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இருந்து வருகிறார்.  அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் சண்முக பாண்டியன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மதுரவீரன் என்ற படத்தில் நடித்திருந்தார் . ஆனால் அதன் பிறகு இவருக்கு,

எந்த ஒரு பட வாய்ப்பு அமையவில்லை . இப்படி இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்  நடிகர் சண்முக பாண்டியன் . குறிப்பாக மீண்டும் வெற்றியை பெற வேண்டும் என்று இந்த படத்திற்காக வெறித்தனமாக உடம்பை மாற்றி இருக்கிறார்,

நடிகர் சண்முக பாண்டியன்.  தற்போது அந்தப் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *