April 24, 2024

அந்த தப்ப விஜய் மட்டும் பண்ணல ..!! அஜித்தும் தான் பண்ணிருக்காரு ..!! வாய்யை கொடுத்து வம்பில் மாட்டிய நடிகை ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்களிலேயே அதிக பிரச்சனையை சந்திப்பது நடிகர் விஜய் மட்டும்தான்.  அந்த வகையில் இவர் அரசியலுக்கு வருகிறார் என்ற தகவல் வந்ததிலிருந்தே இவருடைய படங்களுக்கு தொடர்ந்து பிரச்சனை வந்து கொண்டு தான் இருக்கிறது . அப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ.

இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.  இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சிகரெட் பிடித்தார் என்று பலரும் அவருக்கு எதிராக பேசத் தொடங்கினார்கள் . இப்படி இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் சமீபத்தில் லியோ படத்தின் டிரைலர் வெளியாகி,

இருந்தது . அந்த டிரைலரில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை பேசி இருந்தார்.  தற்போது இந்த விஷயம் இணையத்தில் பூகம்பம் போல வெடித்துள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் இது குறித்து பிரபல நடிகை ஒருவர் விமர்சித்திருக்கிறார் . அவர் வேறு யாருமில்லை நடிகை கஸ்தூரி தான் .

இது குறித்து நடிகை கஸ்தூரி கூறியதாவது , தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தை வருவது புதுசு ஒன்னும் கிடையாது.  மேலும் அஜித் கூட மங்காத்தா படத்தில் கெட்ட வார்த்தை பேசி இருப்பார் . ஆனால் விஜய்யின் வாயிலிருந்து இந்த கெட்ட வார்த்தை வருவது சரியானது கிடையாது .

குறிப்பாக விஜய்யை இப்படி பேச வைத்தது தப்பு , கெட்ட வார்த்தை பேசித்தான் படத்தை ஹிட் கொடுக்கணுமா என்று கேள்விஎழுப்பி இருந்தார் நடிகை கஸ்தூரி . இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் தற்போது கொந்தளித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *