May 5, 2024

400 x 4 எவ்வளவு தெரியுமா ..?? ஜோவிகாவின் பதிலால் அதிர்ச்சியான ரசிகர்கள் ..!! இதுக்கு தான் படி படினு விசித்ரா சொன்னார் ..!!

இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பிக் பாஸ் சீசன் செவனில் நாளுக்கு நாள் போட்டியாளர்களுக்கிடையே சண்டை நிலவிக் கொண்டே இருக்கிறது . அதிலும் சில நாட்களுக்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டது என்றால் வனிதாவின் மகளான ஜோவிகாவுக்கும் , விசித்ராவுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தை தான்.  அந்த வகையில் ஜோவிகா எனக்கு படிப்பு வராததால்,

நான் படிப்பை பாதியிலேயே  நிறுத்தி விட்டேன் . படித்துதான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அவசியமே கிடையாது என்று கூறியிருந்தார் . இதற்கு சக போட்டியாளரான நடிகை விசித்ரா இது தவறான முடிவு . படிப்பு என்பது வாழ்க்கையின் ரொம்ப முக்கியமான ஒன்று,

என்று விளக்கமாக கூறியிருந்தார் . இதற்கு  இதை சொல்ல நீங்க யாரு .? என்று  ஜோவிகா கொந்தளித்து  இருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் விசித்ரா சொன்னது சரி என்பது போல பிக் பாஸ் வீட்டில் ஒரு சம்பவத்தை செய்துள்ளார் ஜோவிகா. அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில்,

ஒரு டாஸ்க் நடந்தது . அப்போது 400×4 எவ்வளவு தெரியுமா என்ற கேள்விக்கு 800 என்று பதில் அளித்து இருந்தார் சக போட்டியாளரான விஜய் . அதன் பிறகும் யோசித்துக் கொண்டிருந்த ஜோவிகாஇன்னும் 400 போடுங்க என்று கூறியிருக்கிறார் . அப்படி பார்த்தால் 1200 தான் வருகிறது .

ஆனால் உண்மையான பதில் 1600 . இப்படி ஒரு அடிப்படை கணக்கு கூட தெரியாமல் இருக்கும் ஜோவிகாவை தற்போது ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *