April 28, 2024

ராகவா லாரன்ஸுடன் இருக்கும் இந்த சிறுவன் யாருன்னு தெரியுதா ..?? அட, தற்போது இவர் தரமான நடிகராச்சே ..?? இவரா என்று ஆச்சிரியமான ரசிகர்கள் ..!!

ராகவா லாரன்ஸ் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ,நடனக் கலைஞர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . மேலும் ஆரம்பத்தில் இருந்தே  தன்னுடைய நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ் . இதனாலையே இவரை பிடிக்காதவர்கள் யாரும் கிடையாது . அப்படி சிறுவயதில் ராகவா லாரன்ஸ் உடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் ஒரு நடிகர் .

அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகர் கருணாஸ் மகனும் நடிகருமான கென் கருணாஸ் தான் . நெடுஞ்சாலை என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் கென் கருணாஸ் . இருந்தாலும் இந்த ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது இயக்குனர் வெற்றிமாறன் ,

இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தான் . இந்த படத்தில் தனுஷின் மகனாக தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கென் கருணாஸ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷ் உடன் இணைந்து வாத்தி என்ற படத்தில்,

நடித்திருந்தார் கென் கருணாஸ் . இப்படி நடிகராக கலக்கி கொண்டு வந்த கென் கருணாஸ் ஒரு சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் ராஜாதி ராஜா படப்பிடிப்பின் போது ராகவா லாரன்ஸ் உடன் புகைப்படம்,

எடுத்திருக்கிறார் கென் கருணாஸ் . அந்த படத்தில் இவருடைய அப்பாவான கருணாஸ் காமெடியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் கலக்கிக் கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *