May 1, 2024

மைக் மோகனை ஹீரோவா பார்த்திருப்பீங்க ..!! இனி வில்லனா பார்ப்பீங்க ..!! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!!

தமிழ் சினிமா உலகில் 80 , 90 காலகட்டங்களில் ஓர் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் நடிகர் மோகன். கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான மூடுபனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் மோகன் . பின்னர் இந்த  படத்தை தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை,

இளமை காலங்கள் ,நூறாவது நாள், 24 மணி நேரம் , பிள்ளை நிலா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் நடிகர் மோகன்.  குறிப்பாக அப்போது நடிகர் மோகனை “மைக் மோகன்” என்று தமிழ் ரசிகர்கள் அன்போடு அழைத்து வந்தனர் . இப்படி புகழின் உச்சத்தில் இருந்து வந்த,

மோகனுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.  இதன் பிறகு பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த மோகன் தற்போது ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார் .இந்நிலையில் விரைவில் வில்லனாக களமரங்க உள்ளாராம் மோகன்.

அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் தான் தளபதி 68.   இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிப்பது நடிகர் மைக் மோகன் தானாம்.  இதற்கு முன்பு விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு அண்ணனாக நடிக்க மைக் மோகனை ,

கேட்டிருந்தார்கள் . ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் விலகி விட்டார்.  இதையடுத்து தற்போது விஜய்க்கு மைக் மோகன் வில்லனாக நடிக்க உள்ளதால் இப்போதே இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *