April 28, 2024

என்னங்க அதுக்குள்ள இந்த பொண்ணு ஹீரோயின் ஆகிருச்சு..!! பிக்பாஸ் ஜோவிகாவுக்கு குவியும் பட வாய்ப்புகள் ..!! பெருமையாக சொல்லிய வனிதா ..!!

பிக் பாஸ் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர்தான் நடிகை வனிதா.  இவருடைய மகளான ஜோவிகாவும்  தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக களம் இறங்கி உள்ளார் . ஆரம்பத்தில் அமைதியான பெண்ணாக இருந்து வந்த ஜோவிகா  தற்போது தன்னுடைய முழு அவதாரத்தையும்  சக  போட்டியாளர்களிடம் காட்டி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் வனிதாவுக்கே இவர் டப் கொடுப்பார் போல .

அப்படி சமீபத்தில் இவருக்கும் சக போட்டியாளரான விசித்ராவுக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தது . இதில் இருவரின் பக்கமும் தவறு இருந்தாலும்,  அதிகம் ஜோவிகாவின் பக்கம் தான் தவறு இருந்ததாக கமல்ஹாசன் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருந்தார் .

இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் ஜோவிகா அதற்குள் கதாநாயகியாக பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளாராம் . அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வனிதா கூறியதாவது,  என்னுடைய மகள் இயக்குனர் பார்த்திபனிடம் கடந்த சில மாதங்களாக உதவி இயக்குனராக,

பணியாற்றி வந்தார்.  அதோடு தற்போது என்னுடைய மகள் இரண்டு படங்களில் ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார்.  ஒன்று தமிழ் படம்,  இன்னொன்று தெலுங்கு படம்.  இந்த இரண்டு திரைப்படங்களிலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ஜோவிகா நடிப்பார் என்றும் ,

இதை சொல்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது என்றும் கூறியிருந்தார் நடிகை வனிதா. இதைப் பார்த்த ரசிகர்கள் என்னங்க அதுக்குள்ள இந்த பொண்ணு ஹீரோயின் ஆகிருச்சு என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *