May 4, 2024

ஒரு படம்னா பரவாயில்லை ..!! இத்தனை சூப்பர் ஹிட் படங்களை தவற விட்ட ஜெய் ..!! இப்ப புலம்பி என்ன பிரோஜனம் ..??

ஜெய் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . விஜய் நடிப்பில் வெளியான பகவதி என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகர் ஜெய் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சென்னை 600028,  சுப்ரமணியபுரம் போன்ற படங்களின் மூலம் தான் .  இதன் பிறகு கோவா ,எங்கேயும் எப்போதும்,  ராஜா ராணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் ஜெய்.

ஆனால் சமீப காலமாக இவரின் நடிப்பில் வெளியாகும் எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.  அப்படி தொடர் தோல்வியிலும் கூட அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார் ஜெய் . ஆனால் ஒரு காலகட்டத்தில் இவருக்கு பல சூப்பர் ஹிட் ,

படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்திருக்கிறது.  அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் முதலில் நடித்தது ஜெய் தானாம்.  அதேபோல  ஜீவா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த சிவா மனசுல சக்தி படத்திலும் முதலில் நடிக்க இருந்தது ஜெய் தானாம்.

இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை மிரட்டிய ராட்சசன் படத்திலும்,   சிம்பு நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலும் முதலில் கமிட்டானது நடிகர் ஜெய் தானாம் . ஆனால் இந்த படங்களில் எல்லாம் ஒரு சில,

காரணங்களால் ஜெய்யால்  நடிக்க முடியாமல் போய்விட்டதாம் . ஆனால் அதை இப்போது நினைத்து புலம்பி வருகிறாராம்  நடிகர் ஜெய் . இதைப் பார்த்த ரசிகர்கள் யாருயா இவரு இத்தனை சூப்பர் ஹிட் படங்களை தவற விட்டு இருக்காரு என்று கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *