April 26, 2024

நான் தான் “கெட்ட வார்த்தை” பேச சொல்லி கட்டாயப்படுத்தினேன் ..!! திட்டுவதாக இருந்தால் என்னை திட்டுங்கள்..!! விளக்கம் கொடுத்த லோகேஷ் ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக பார்க்கப்படுபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . ஏற்கனவே விஜய்யை  வைத்து மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்திருந்த லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ளார் . அந்த வகையில் இவர்களுடைய கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் இந்த மாதம் வெளியாக ,

உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறாராம்.  இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . ஆனால் இந்த படத்தில் நடிகர் விஜய் கெட்ட வார்த்தை ,

பேசி இருந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது  என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் சமூக ஆர்வலர்கள் பலரும் விஜய்க்கு எதிராக பேசத் தொடங்கினார்கள் . இப்படி இருக்கும் நிலையில் இந்த கெட்ட வார்த்தை குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியதாவது,  இந்த பிரச்சனைக்கும்,

விஜய் அண்ணாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது . நான் தான் அவரை கட்டாயப்படுத்தி அந்த வார்த்தையை பேச வைத்தேன்.  மேலும் இந்த வார்த்தை ஒரு கோபத்தின் வெளிப்பாடுதான்.  குறிப்பாக இந்த வார்த்தை கதைக்கு தேவைப்பட்டது . அப்படி இந்த கெட்ட வார்த்தை ,

யாரையாவது கஷ்டப்படுத்தி இருந்தால் அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் . திட்டுவதாக இருந்தால் என்னை திட்டுங்கள் என்று கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *