April 22, 2024

மைக் மோகனுக்கு ஜோடியான 35 வயது நடிகை ..!! ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே ..!! 67 வயதிலும் மோகன் எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

எண்பதுகளில் தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத கதாநாயகனாக கலக்கி கொண்டு வந்தவர் நடிகர் மோகன்.  அந்த வகையில் கடந்த 1980 ஆம் ஆண்டு வெளியான மூடுபனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் நடிகர் மோகன்.  பின்னர் இந்த  படத்தை தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே ,கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை ,

அந்த சில நாட்கள் ,இளமை காலங்கள், நூறாவது நாள் ,நான் பாடும் பாடல் ,24 மணி நேரம் , மௌன ராகம் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் மோகன் . மேலும் அப்போது ரசிகர்கள் இவரை மைக் மோகன்,

என்று அன்போடு அழைத்து வந்தனர் . இப்படி புகழின் உச்சத்தில் இருந்து வந்த நடிகர் மைக் மோகனுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது . இதன் பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் மைக் மோகன் தற்போது ஹரா என்ற படத்தில்,

ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார் . இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக 35 வயது நடிகை ஒருவர் நடிக்க உள்ளாராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகை அனுமோல் தான் . தமிழில் வெளியான கண்ணுக்குள்ளே ,ஒரு நாள் இரவில் , அயலி போன்ற பல திரைப்படங்களில்,

நடித்திருந்த மலையாள நடிகையான அனுமோல் தான் மைக் மோகன் ஜோடியாக நடிக்க உள்ளாராம்.  அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *