May 2, 2024

நேற்றுவரை மகள் ட்ரெண்டிங்கில் இருந்தார் ..!! இன்றைக்கு அம்மாவா ..?? போலீஸ் கெட்டப்பில் மிரட்டும் வனிதா ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

வனிதா விஜயகுமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . மூத்த நடிகரான விஜயகுமாரின் மகளான வனிதா கடந்த 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மாணிக்கம் ,நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுனு இருக்கு ,அநீதி , அந்தகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இருந்தாலும் இவர் தமிழ் மக்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான்.  இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இருந்த வனிதாவின் மகளான  ஜோவிகாவும் தற்போது பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் .

குறிப்பாக வனிதாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் எல்லா போட்டியாளர் களையும் மிரளவைத்து வருகிறார் ஜோவிகா . அந்த வகையில் நேற்று பிக்பாஸ் வீட்டில் இவருக்கும் விசித்ராவுக்கும் ஒரு குழாய் அடி சண்டையே வந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இதனால்  நேற்று வரை,

ஜோவிகா தான் எல்லா  சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார் . இப்படி நேற்று வரை மகள் ட்ரெண்டிங்கிலிருந்து வந்த நிலையில்,  தற்போது நடிகை வனிதா ட்ரெண்டிங்கில் உள்ளார்.  அந்த வகையில் தற்போது வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் ,

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்  நடிகை வனிதா . தற்போது அந்தப் படத்தின் போஸ்டர் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *