April 29, 2024

நம்மையெல்லாம் கண்கலங்க வைத்த “கன்னத்தில் முத்தமிட்டால்” பட சிறுமி இப்ப எப்படி இருக்கிறார் பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால்.  இந்த படத்தில் மாதவன், சிம்ரன், நந்திதா தாஸ் ,பிரகாஷ்ராஜ் ,சக்ரவர்த்தி, டெல்லி குமார் ,பசுபதி, ஈஸ்வரி ராவ் போன்ற பல நடிகர்,  நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்,

தேசிய விருது உட்பட பல விருதுகளை குவித்தது . மேலும் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் தான் கீர்த்தனா.  இவர் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் மகள் ஆவார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான,

தேசிய விருதை வென்றார் கீர்த்தனா . இப்படி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தனா பின்னர் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார் . இதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்து கொண்டார் கீர்த்தனா .

இப்படி இருக்கும் நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் சிறுமியா இவர் என்று ஆச்சிரியத்தில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *