April 29, 2024

நடிகர் விஜய்யின் டூப் இவர் தானா ..?? அப்ப லியோ படத்திலும் சண்டை போடலையா ..?? இதுக்கு எதுக்கு 120 கோடி சம்பளம் ..!!

கடந்த மாதம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இந்த படத்தில் பார்த்திபன் மற்றும் லியோ என்ற இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய்யுடன் இணைந்து சஞ்சய்தத் , திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன் ,அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், மடோனா செபாஸ்டின் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . குறிப்பாக இந்த திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.  மேலும் இந்தப் படத்தில் விஜய் ஒரு காட்சிக்கு கூட டூப் போடாமல் தான் நடித்திருந்தார் என்று கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ்.

இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தில் விஜய்க்கு டூப் போட்ட நடிகரின் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது.  அந்த வகையில் இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான பிகில் ,பீஸ்ட்,  வாரிசு போன்ற படங்களில் இவர்தான் டூப் போட்டிருந்தாராம் .

ஆனால்  இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் விஜய் டூப் போடவில்லை என்று கூறியிருந்தார் . அப்படி இருக்கும்போது எதற்கு லியோ படத்தின் படப்பிடிப்பில்  அவர் கலந்து கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது . அது மட்டுமல்லாமல் லியோ படத்தில் விஜய் போட்டிருந்த,

அதே காஸ்ட்யூமை  இவரும் போட்டு இருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் இதற்குத்தான் 120 கோடி சம்பளமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *