April 22, 2024

ஒரே ஒரு கெட்ட வார்த்தை தான் ..!! மொத்த அரசியல் கனவும் கிளோஸ் ..!! தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட “லியோ” விஜய் ..!!

தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ . இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத்,  திரிஷா ,அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் , மிஷ்கின் , பிரியா ஆனந்த் போன்ற பல நடிகர்,  நடிகைகள் நடித்துள்ளனர் . லலித் குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் .ஆனால் இந்த டிரைலரால் தற்போது விஜய்யின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.  அந்த வகையில் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்ற ஒரு காட்சியில்,

  தே*** பையன் என்ற கெட்ட வார்த்தையை பேசியிருந்தார் விஜய்.  தற்போது இதுதான் பூகம்பமாக  வெடித்துள்ளது.  மேலும் நடிகர் விஜய் தற்போது அரசியலில் களமிறங்குவதற்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  அப்படி முதல்வர்,

பதவிக்கு போட்டியிடும் விஜய் கெட்ட வார்த்தை பேசலாமா என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர் . அது மட்டுமல்லாமல் விஜய்க்கு குழந்தை ரசிகர்கள் அதிகம் உள்ளனர் .  அப்படி இருக்கும் போது விஜய் இந்த கெட்ட வார்த்தையை பேசியிருக்கக் கூடாது என்றும் ,ட்ரெய்லரிலேயே,

இப்படி ஒரு வார்த்தை இருக்கும்போது படத்தில் இன்னும் என்னென்ன இருக்கப் போகுதோ என்று பலரும் கூறி வருகின்றனர்.  மேலும் லோகேஷ்க்கு தான் அறிவில்லை,  விஜய்யாவது இதையெல்லாம் யோசித்து இருக்க வேண்டாமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *