May 6, 2024

ஆறாவது நாளிலேயே படுத்த லியோ வசூல் ..!! அப்ப ஜெயிலரை முந்துவது சந்தேகம் தானா ..?? சோகத்தில் விஜய் ரசிகர்கள் ..!!

தற்போது நடிகர் விஜய்யின் கேரியரிலேயே அதிகம் வசூல் செய்த படமாக இருந்து வருகிறது லியோ திரைப்படம் . அந்த வகையில் கடந்த வியாழக்கிழமை வெளியான இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார் . இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய்தத் ,அர்ஜுன், திரிஷா ,மிஸ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், பாபு ஆண்டனி ,

சாண்டி மாஸ்டர் ,மடோனா செப்பாஸ்டின் , மேத்யூ தாமஸ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.  எஸ் எஸ் லலித்குமார் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் .  இப்படி வெளியான திரைப்படம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் ,

மற்ற ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே  பெற்று வருகிறது . அப்படி இருந்தும் கூட இந்த திரைப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் முதல் நாளிலேயே 148 கோடிக்கு மேல் வசூல் செய்த லியோ திரைப்படம்,

ஆறாவது நாளில் வசூலில் சரியான அடி வாங்கியிருக்கிறது . அந்த வகையில் ஆறாவது நாளில் மொத்தமாக 435 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம் லியோ திரைப்படம் . மேலும் விடுமுறை நாட்கள் எல்லாம் முடிந்ததால் இனி லியோ படத்தின் வசூல் மந்தமாக இருக்கும் ,

என்றும் கூறப்படுகிறது.  இதனால் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ திரைப்படம் முறியடிக்குமா என்பது சந்தேகம்தான் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *