April 25, 2024

என்னோட சுட்டி பையன் ..!! மகனுடன் எடுத்த கியூட் புகைப்படங்களை பகிர்ந்த சிவகார்த்திகேயன் ..!!

தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான மெரினா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து 3 , மனம் கொத்திப் பறவை ,கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் இவரை பட்டித்தொட்டி ஏங்கும் பிரபலமாக்கியது. இதன் பிறகுதான் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராக மாறினார் நடிகர் சிவகார்த்திகேயன்.  இதை அடுத்து தொடர்ச்சியாக குடும்ப,

ரசிகர்களை கவரும் வகையில் கதைகளை தேர்வு செய்து தவிர்க்க முடியாத நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  தற்போது இவர் அயலான்,  எஸ் கே 21 என்று இரண்டு திரைப்படங்களுக்கு மேல்  கைவசம் வைத்திருக்கிறார் .

இதனிடையே அவருடைய உறவினர் பெண்ணான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் தாஸ் என்ற மகனும் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் அயலான் படத்தின் நிகழ்ச்சியில்,

தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.  அப்போது மகனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *