May 9, 2024

அஜித்துக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை ..!! அதிர்ஷ்டம் அடிச்சா இப்படி அடிக்கனும் ..!! பொறாமையில் பொங்கும் சக நடிகைகள் ..!!

தற்போது இயக்குனர் மகிழ்  திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி . இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் கழித்து தான் இந்த படத்தின் படப்பிடிப்பே தொடங்கி இருக்கிறது.  மேலும் இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா ,ரெஜினா போன்ற நடிகைகள் நடிக்க உள்ளனர்.  இப்படி இருக்கும் நிலையில் அஜித்துக்கு ,

ஜோடியாகியுள்ளார் சீரியல் நடிகை ஒருவர்.  அவர் வேறு யாரும் இல்லை நடிகை பிரியா பவானி சங்கர் தான் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர் .

பின்னர் இந்த சீரியலில் இவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து சினிமா வாய்ப்பையும் பெற்றார் பிரியா பவானி சங்கர் . அந்த வகையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம் ,ஓ மணப்பெண்ணே, யானை ,திருச்சிற்றம்பலம், பத்து தல, பொம்மை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இதையடுத்து தற்போது விடாமுயற்சி படத்திலும் கமிட் ஆகியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

குறிப்பாக இவருடைய கேரியரிலேயே இந்த திரைப்படம் தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் . இதனால் இந்த படத்திற்கு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமையும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *