April 29, 2024

80 , 90 களில் கலக்கிய நடிகர் ரமேஷ் அரவிந்தின் குடும்ப புகைப்படங்கள் உள்ளே ..!!

80 , 90களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ரமேஷ் அரவிந்த் . கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் நடிகர் ரமேஷ் அரவிந்த் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உன்னால் முடியும் தம்பி, கேளடி கண்மணி ,வசந்தகால பறவை ,இதய வாசல்,

டூயட் ,சதிலீலாவதி, பஞ்சதந்திரம்  போன்ற பல படங்களில் நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார் நடிகர் ரமேஷ் அரவிந்த் . குறிப்பாக  இவர் உலகநாயகன் கமலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . இப்படி நடிகராக கலக்கிக்கொண்டு வந்த ரமேஷ் அரவிந்த் கமல்ஹாசனை வைத்து உத்தமவில்லன் என்ற படத்தையும் இயக்கியிருந்தார்  .

இதனிடையே அர்ச்சனா என்பவரை திருமணம் செய்து கொண்ட ரமேஷ் அரவிந்துக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் .  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத நடிகர் ரமேஷ் அரவிந்தின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *