May 2, 2024

சாதாரணமா இந்த இடத்துக்கு வரல ..!! இன்று 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய்யின் ..!! முதல் சம்பளம் இவ்வளவு தானா ..?? படிப்படியாக மேலே வந்த தளபதி ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போட்டியாக இருந்து வருவது நடிகர் விஜய் தான்.  காரணம் தமிழ் சினிமாவிலேயே அதிக வசூல் செய்வது ரஜினியின் படங்கள் தான் . ஆனால் தற்போது ரஜினியின் படங்களை கொஞ்சம் கொஞ்சமாக முந்தி செல்கிறார் நடிகர் விஜய் . அதோடு சமீப காலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றும் கருத்துக்கள் நிலவி வருகிறது.  இருந்தாலும் இதையெல்லாம் ,

கண்டு கொள்ளாமல் நடித்து வரும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார்.  இந்த திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இதை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் .

இந்தப் படத்திற்காக விஜய்க்கு 200 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இப்படி  ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கும் விஜய் தன்னுடைய முதல் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை கேட்டால் நீங்களே ஆச்சிரியப்படுவீங்க.  அந்த வகையில் நடிகர் விஜய் ,

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தாலும் அதற்கு முன்பே ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் . அப்படி விஜய்யின் அப்பா இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வெற்றி. இந்த படத்தில் ,

சிறு வயது விஜயகாந்தாக நடித்திருந்த விஜய்க்கு 500 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாம் . அப்படி அந்த 500 ரூபாய் சம்பளத்தில் தொடங்கிய விஜய்யின் கேரியர் இன்று 200 கோடியை தொட்டது பிரம்மாண்ட சாதனையாகவே பார்க்கப்படுகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *