May 2, 2024

ஜோடியாக நிற்கும் அஜித் திரிஷா ..!! விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம் ..!! எத்தனை நாள் ஆச்சு இவர்களை இப்படி பார்த்து..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார் . தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வரும் அஜித் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக்கி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.  இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ரெஜினா போன்ற பல பிரபலங்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர் .

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . மேலும் இதற்கு முன்பே அஜித்தும் , திரிஷாவும் இணைந்து கிரீடம் ,ஜி ,என்ன அறிந்தால் ,மங்காத்தா போன்ற படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி,

இருந்து வந்தது . இதை அடுத்து ஐந்தாவது முறையாக இந்த படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர் . மேலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பல மாதங்கள் ஆகியும் திரிஷாவும்,  அஜித்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகாமல் இருந்து வந்தது .

இதை அடுத்து ஏர்போர்ட்டில் திரிஷாவும் , அஜித்தும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது . இதைப்பார்த்த ரசிகர்கள் எத்தனை நாள் ஆச்சு இவர்களை இப்படி பார்த்து என்று கூறிவருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *