April 27, 2024

இன்று சூப்பர் ஸ்டாருக்கு மட்டும் பிறந்தநாள் இல்லை ..!! இந்த பிரபலத்துக்கும் தான் ..!! இவரை எப்படி மறந்தார்கள் ..?? vவாழ்த்து சொல்லும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமா உலகில் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தில் கொடி கட்டி பறந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  73 வயதாகியும் கூட சூப்பர் ஸ்டாருக்கு ஓய்வில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு இந்த வயதிலும் இளம் நடிகர் போல பல படங்களில் கமிட்டாகி நடித்துக்கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.

இந்நிலையில் டிசம்பர் 12 வந்தாலே சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . ஆனால் இதே நாளில் இன்னொரு பிரபலத்தின் பிறந்தநாள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. அவர் வேறு யாருமில்லை இயக்குனரும் நடிகருமான சேரன் தான்.

ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த சேரன் பாரதி கண்ணம்மா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பொற்காலம் ,வெற்றிக்கொடி கட்டு ,பாண்டவர் பூமி ,ஆட்டோகிராப் ,தவமாய் தவமிருந்து ,

போன்ற பல தரமான திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் சேரன்.  ஆனால் அண்மைக்காலமாக இயக்குவதை நிறுத்திவிட்டு முழு நேர நடிகராகவே மாறிவிட்டார் . இதை அடுத்து பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு தற்போது,

நான் ஈ பட வில்லனான சுதிப்பை வைத்து ஒரு படத்தை எடுக்க உள்ளாராம் . இப்படி இருக்கும் நிலையில் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் இயக்குனரும் நடிகருமான சேரனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *