April 30, 2024

பணத்தாசை யாரை விட்டுச்சு ..!! திடீரென தாறுமாறாக சம்பளத்தை ஏற்றிய அஜித் ..!! அதில் இப்படியொரு சென்டிமென்ட்டா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார்.  அமராவதி என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தை  தொடங்கிய அஜித் ஆரம்பக் காலகட்டங்களில் பல போராட்டங்களுக்குப் பிறகுதான் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . குறிப்பாக தமிழ் சினிமாவிலேயே தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று இருந்து வருபவர் நடிகர் அஜித் மட்டும் தான் .

இதனாலேயே தன்னுடைய ரசிகர் மன்றத்தையும் சில வருடங்களுக்கு முன்பே கலைத்துவிட்டார் அஜித்.  இதை அடுத்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தின் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் அஜித்.

இந்த படத்தில் அஜித் உடன் இணைந்து திரிஷா ,அர்ஜுன் ,ரெஜினா போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர் . இந்த படத்தை முடித்த கையோடு மார்க் ஆண்டனி  பட இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித் . இப்படி இருக்கும் நிலையில்,

எல்லாத்துலயும் சென்டிமென்ட் பார்க்கும் அஜித் சம்பளத்திலும் சென்டிமென்ட் பார்த்து தாறுமாறாக ஏற்றி இருக்கிறார் . அந்த வகையில் விடாமுயற்சி படத்திற்காக 105 கோடி சம்பளம் வாங்க உள்ள அஜித் தன்னுடைய அடுத்த படத்திற்கு 163 சம்பளம் கேட்டு இருக்கிறாராம் .

காரணம் இந்த மூன்று நம்பரையும் கூட்டினால் ஒன்று வருமாம்.  அஜித்தின் ராசியான நம்பர் ஒன்னு தானாம் . அதனால் தான் இவ்வளவு சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *