April 27, 2024

லோகேஷ் மட்டும் ஒசத்தி ..!! இவருனா இளக்காரமா ..?? ரஜினி பட இயக்குனரை கொண்டாடவே யோசிக்கும் ரசிகர்கள் ..!! பாவம்யா அந்த மனுஷன் ..!!

பொதுவாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் இயக்குனர்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள்.  இது ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே  நடந்து வருகிறது . இப்படி இருந்த நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது .

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜை  தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் ரஜினி படத்தையும் இயக்கப் போகிறார் என்று தெரிந்ததும் மாலை மரியாதை போட்டு வரவேற்கின்றனர்.  இப்படி லோகேஷை கொண்டாடும் ரசிகர்கள் இன்னொரு ரஜினி பட இயக்குனரை,

கொண்டாடாதது கொஞ்சம் வருத்தமான ஒன்றுதான் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் டி ஜே ஞானவேல் தான் . கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான கூட்டத்தில் ஒருத்தன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான டி ஜே ஞானவேல் ஜெய் பீம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த,

தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் . இந்த படத்தைப் பார்த்து தன்னுடைய 170 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . ஆனால் எந்த பக்கம் பார்த்தாலும் ரஜினியின் 171 வது படத்தை மட்டும் தான் ,

பேசிக் கொண்டிருக்கிறார்கள் . டி ஜே ஞானவேல் இயக்கும் படத்தை யாருமே கண்டு கொள்ளவில்லை . இன்னும் சொல்லப்போனால் ரஜினியே இந்த படம் குறித்த எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறார் . இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *