April 29, 2024

20 வருடங்கள் கழித்து ..!! விஜய்யுடன் இணையும் குடும்ப குத்துவிளக்கு ..!! ரசிகர்களின் பேவரைட் நடிகையை..!! களத்தில் இறக்கி விட்ட வெங்கட் பிரபு ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களின் ஒருவராக இருந்து வரும் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ என்ற படத்தில் நடித்து  முடித்து விட்டார் . இதைத்தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ள தளபதி 68 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் . இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.  சமீபத்தில் தான் இந்த படத்தின்,

அறிவிப்பு வெளியாகி இருந்தது.  குறிப்பாக இந்த படத்தில் அப்பா,  மகன் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது . இதனால் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள் படக்குழுவினர் .

ஆனால் ஜோதிகா நடிக்க முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டாராம் .  இதன் பிறகு சிம்ரனிடம் கேட்டுள்ளனர் படக்குழுவினர்  . கடைசியில் அவரும் மறுத்துவிட்டாராம் . இதனால் 20 வருடங்கள் கழித்து விஜய்யுடன் இணைய உள்ளாராம் குடும்ப குத்துவிளக்கு நடிகை ஒருவர் .

அவர் வேறு யாருமில்லை நடிகை சினேகா தான். தமிழ் சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வரும் சினேகா  கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வ பாரதி இயக்கத்தில் விஜய் நடிப்பில்  வெளியான  வசீகரா  படத்தில் விஜய்க்கு ஜோடியாக  நடித்திருந்தார் .இந்த படத்தில்,

இவர்களுடைய ஜோடி பொருத்தம் நன்றாக இருந்தது.  இந்நிலையில் 20 வருடங்கள் கழித்து மீண்டும்  விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது . இதனால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *