May 8, 2024

விஜய்யுடன் நடிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு ..!! 72 வயது நடிகருடன் ஜோடி சேர்ந்த ஜோதிகா ..!! அப்படி விஜய் மீது இவருக்கு என்ன கோபம் ..??

தமிழ் திரையுலகை கலக்கி கொண்டு வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஜோதிகா.  90களில் இருந்தே தமிழ் சினிமாவை கலக்கி வரும் ஜோதிகா ரஜினி , கமல் , விஜய் அஜித் , சூர்யா , விக்ரம் போன்ற  பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் . இதனிடையே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகாவுக்கு ஒரு மகள் ஒரு மகன்  உள்ளனர் .

மேலும் திருமணத்துக்கு பிறகும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஜோதிகா.  ஆனால் இவர் திருமணம் ஆனதிலிருந்து தொடர்ந்து விஜய் படங்களை மட்டுமே  ஒதுக்கி கொண்டு வருகிறார் நடிகை ஜோதிகா .

அந்த வகையில் விஜய்யுடன் குஷி , திருமலை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்த ஜோதிகா தான் மெர்சல் படத்தில் முதலில் நடிக்க இருந்தாராம்.  ஆனால் ஒரு நாள் மட்டும் நடித்துவிட்டு விலகி விட்டாராம் . இதைத்தொடர்ந்து சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ,

உருவாகி வரும் தளபதி 68 படத்திலும் ஜோதிகாவை நடிக்க வைக்க கேட்டுள்ளனர் . ஆனால் இந்த படத்திலும் நடிக்க மறுத்திருக்கிறார் நடிகை ஜோதிகா . இப்படி இருக்கும் நிலையில் விஜய் படத்தை வேண்டாம் என்று சொல்லி ஜோதிகா தற்போது 72 வயது நடிகருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை பிரபல மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டி தான்.  காதல் தி கோர் என்ற படத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருக்கிறார் . தற்போது அந்த படத்தின்  புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *