April 29, 2024

செந்தூ ரப்பூ வே நிரோ ஷா வா இ து ..?? 52 வய திலு ம் எப்படி இருக் கிறார் பா ருங் க ..!! வெளி யான லேட்ட ஸ்ட் புகை ப்பட ங் கள் ..!!

பழம்பெரும் நடிகரான எம் ஆர் ராதாவின் மகள் தான் நிரோஷா . கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிரோஷா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சூரசம்ஹாரம் ,செந்தூரப்பூவே ,பாண்டி நாட்டு தங்கம் ,மருதுபாண்டி, வெற்றிப்படிகள் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை நிரோஷா .

மேலும் செந்தூரப்பூவே படத்தில் நடிக்கும் போது தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ராம்கியை காதலித்து வந்தார் நடிகை நிரோஷா . இதன் பிறகு பல எதிர்ப்புகளை மீறி கடந்த 1995 ஆம் ஆண்டு ராம்கியும்,  நிரோஷாவும் திருமணம் செய்து கொண்டனர் . மேலும் திருமணமான ,

பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த நிரோஷா நீண்ட இடைவேளைக்கு பிறகு கந்தா கடம்பா கதிர்வேலா என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . தற்போது இவர் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார் . குறிப்பாக,

இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒளிப்பரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா, தாமரை , சந்திரகுமாரி, உயிரே ,வைதேகி காத்திருந்தால் போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் சமூக வலைத்தளங்களில்,

எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் நிரோஷா அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *