சுத்தமாக செட்டாகாத வித்தியாசமான கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் ..?? அடுத்து படு மோசமாக உருவாகி வரும் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் ..?? இதை ரசிகர்கள் விரும்புவார்களா ..??

0

சினிமா துறையில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி தற்பொழுது டாப் ஹீரோக்களில், ஒருவராக இருக்கக் கூடியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தனது படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து  நடித்து வருகிறார். அப்படியாக வித்தியாசமான கேரக்டரில் நடித்த சிவகார்த்திகேயனின் 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளியான திரைப்படம் கனா. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இப்படத்தில் சிவகார்த்திகேயன் கிரிக்கெட் விளையாட்டின் கோச்சாக நெல்சன் திலீப்குமார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஹீரோவில் காமெடி கலந்த நடிப்பில் மாஸ் காட்டிய இவருக்கு இந்த கேரக்டர் சுத்தமாக செட்டாகாமல் போனது.

இயக்குனர் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் காக்கி சட்டை. இதில் சிவகார்த்திகேயன் உடன் ஸ்ரீதிவ்யா, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் மதிமாறன் என்னும் போலீஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்திருப்பார். ஆனால் போலீஸ் கதாபாத்திரம் சிவாவிற்கு செட்டாகாமல் மொக்கையாய் ஊத்திக்கொண்டது என்றே சொல்லலாம்.

நெல்சன் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டாக்டர். இதில் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் டாக்டர் கேரக்டரில் நடித்திருப்பார். அதிலும் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வரும் இவர் இப்படத்தில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரோபோட்டாகவே மாறி இருப்பார். இருந்தாலும் இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாவீரன். இதில் சிவகார்த்திகேயன் உடன் அதிதி சங்கர், மிஸ்கின், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் இப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக படு மாசாக நடித்திருக்கிறார். ஆனால் இதை ரசிகர்கள் விரும்புவார்களா என்று  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹீரோ. இதில் சிவகார்த்திகேயன் உடன் அர்ஜுன், இவானா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அதிலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை.

Leave A Reply

Your email address will not be published.