ஒரு வழியா ரஜினியை திருப்பதி படுத்திய இயக்குனர்..?? இயக்குனரை லாக் செய்த ரஜினி..!! இந்த நடிகரும் இதில் வருவார் பூரித்து போன ரஜினி..!!

0

ரஜினிகாந்த்   இப்போது   ஜெயிலர்   திரைப்படத்தில்   நடித்து   வருகிறார்.   நெல்சன்   இயக்கத்தில்   உருவாகி   வரும்   இப்படத்தை   சன்   பிக்சர்ஸ்   நிறுவனம்   மிகப்பெரிய பட்ஜெட்டில்   தயாரித்து   வருகிறது .   பல   மாதங்களாக   நடைபெற்று   வந்த   இந்த   படத்தின் படப்பிடிப்பு   தற்போது   முக்கால்  வாசிக்கும்   மேல்   முடிவடைந்து   இருக்கிறது.  இதை   அடுத்து சூப்பர்   ஸ்டார்   எந்த  இயக்குனர்   படத்தில்   நடிக்க  போகிறார்   என்பது  தான்   தற்போது பரபரப்பை   ஏற்படுத்தி   இருக்கிறது.

ஏற்கனவே   இந்த  போட்டியில்   சிபி   சக்கரவர்த்தி,   பிரதீப்   ரங்கநாதன்   உள்ளிட்ட   பல இயக்குனர்களின்   பெயர்கள்   அடிபட்டது.   அதில்   சிபி   சக்கரவர்த்தி   தான்   நிச்சயம் ரஜினியின்   படத்தை   இயக்குவார்   என்ற   ஒரு தகவலும்   உலா   வந்தது.  ஆனால்   அவருடைய கதை   ரஜினிக்கு   திருப்தி   தராத   காரணத்தால்   அவர்   இந்த   ரேசிலிருந்து   விலகினார்.

அதன்   பிறகு   பல   இயக்குனர்களிடம்   கதை  கேட்ட   ரஜினிக்கு   எதுவுமே   திருப்தி அளிக்கவில்லை.   இப்படி   குழப்ப   நிலையில்   இருந்த   ரஜினி   இப்போது   தன்னுடைய   அடுத்த படத்திற்கான  இ யக்குனரை   ஒரு வழியாக   லாக்   செய்திருக்கிறார்.   இது   பலரும்   எதிர்பார்த்த விஷயம்தான்.  அந்த   வகையில்   ஜெய் பீம்   திரைப்படத்தின்   மூலம்   பிரபலமான

டி ஜே ஞானவேல்   தான் ரஜினியின்   அடுத்த   பட   இயக்குனர்.   இவரிடம் கதையைக் கேட்ட ரஜினி   ரொம்பவே   இம்ப்ரஸ்   ஆகி   இருக்கிறார்.  அதாவது   ஹீரோவுக்கான   படமாக இல்லாமல்   எதார்த்தமான   கதையாக   இருக்க   வேண்டும்   என்றுதான்   ரஜினி   ஆசைப்பட்டார். அவர்  எதிர்பார்த்தது   போலவே   ஞானவேல்   ஒரு  ஸ்கிரிப்ட்   ரெடி   செய்து   கூறி   இருக்கிறார்.

அது   ரஜினிக்கும்   பிடித் து  போனதால்   தற்போது   இந்த   கூட்டணி  உறுதியாகி   இருக்கிறது. இதற்கு  மற்றொரு   காரணமும்   இருக்கிறது.   அதாவது  இந்த   படத்தில்  சூர்யாவை   சிறு ரோலில்   தலை   காட்ட வைக்கவும்   தயார்   என்று   ஞானவேல்   கூறியிருக்கிறார்.  அந்த வார்த்தையை   கேட்டு   தான்   சூப்பர்   ஸ்டார்   சிலிர்த்துப்   போய்   இருக்கிறார்.

லைக்கா   நிறுவனமும்   இதற்கு   பரிபூரண   சம்மதம்   தெரிவித்து   இருக்கிறது.  மேலும் சூர்யா வும்  ரஜினிக்காகவும்  இந்த   படத்தில்  தலை   காட்டுவார்  என்று   எதிர்பார்க்கப்படுகிறது. தற் போ து ஜெயிலர் திரைப்படத்தில் பிசியாக இருக்கும் ரஜினி விரைவில் தன்னுடைய காட்சிகளை முடித்து   கொடுத்துவிட்டு   இந்த   படத்தில்   கவன ம்   செலுத்த   இருப்பது    குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.