தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் நடித்த எந்த படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது . இதன் பிறகுதான் சூர்யாவிற்கு என்று ஒரு தனி மார்க்கெட் உருவானது . இதை அடுத்து தற்போது ,
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் சூர்யா . இந்த படத்தில் சூர்யாவின் இணைந்து திஷா பட்டாணி, பாபி தயால் , நட்டி நட்ராஜ் ,ஜெகபதிபாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ,கோவை சரளா, ஆனந்தராஜ், மாரிமுத்து ,
தீபா வெங்கட் ,ரவி ராகவேந்திரா, கே எஸ் ரவிக்குமார் ,அவினாஷ் ,போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இந்த படத்தை முடித்த,
கையோடு சுதா கொங்காரா இயக்க உள்ள புறநானூறு என்ற படத்திலும் , வெற்றிமாறன் இயக்க உள்ள வாடிவாசல் என்ற படத்தில், அது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு இயக்குனர்களின் படத்திலும் நடிக்க இருக்கிறார் சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் கங்குவா திரைப்படத்திற்காக,
தன்னுடைய இடையை இரண்டு மடங்காக ஏற்றிய சூர்யா தற்போது அநியாயத்துக்கு ஒல்லியாக மாறி இருக்கிறார். தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சூர்யாவா இது என்று ஷாக்காகி உள்ளனர்….