தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி . இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில் வடிவேலு இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு இவருடன் இணைந்து மோனிகா ,தேஜாஸ்ரீ ,நாசர் ,இளவரசு, ஸ்ரீமன் ,நாகேஷ் ,வெண்ணிற ஆடை மூர்த்தி , வி எஸ் ராகவன் ,
மனோரமா ,மனோபாலா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வடிவேலுவுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த படத்தில்,
முதலில் நடித்திருந்தது வேறு ஒரு நடிகர்கள் தானாம். அவர்கள் வேறு யாருமில்லை பிரபுதேவா மற்றும் ஜெயராம் தான். இவர்களிடம் தான் முதலில் இயக்குனர் கதை சொன்னாராம். ஆனால் இவர்கள் இருவராலும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போன பிறகுதான் வடிவேலு நடித்ததாக கூறப்படுகிறது…