தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் சீரியல் . இந்த சீரியல் தான் தற்போது டி ஆர் பியில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது . அப்படி இந்த சீரியலில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சத்திய பிரியா. கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான மஞ்சள் முகமே வருக என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை சத்யபிரியா.
பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கலக்கி கொண்டு வந்தார் நடிகை சத்ய பிரியா . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஒரு கட்டத்தில் வயதாகி விட்டதால் தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார் நடிகை சத்ய பிரியா. இதனிடையே முகுந்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை சத்ய பிரியாவுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதில் இருவருக்குமே தற்போது திருமணம் ஆகிவிட்டது . இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத எதிர் நீச்சல் சத்யபிரியாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …