April 29, 2024

இந்த புகைப்படத்தில் இருப்பது யாருன்னு தெரியுதா ..?? அட, இவர் 90 ஸ் ரசிகர்களின் பேவரைட் நடிகையாச்சே ..?? என்ன திடீருன்னு இப்படி மாறிட்டாங்க..??

தமிழ் சினிமா உலகில் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் தலைநகரம் . இந்த படத்தில் சுந்தர் சிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் நடிகை ஜோதிர்மயி . இந்த படத்தின் மூலம் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும்.  குறிப்பாக 90 ஸ் ரசிகர்கள் இவரை மறந்திருக்க மாட்டார்கள்.

அப்படி ஆரம்பத்தில் மலையாள படங்களில் தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கி கொண்டு வந்த ஜோதிர்மயி கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சிவலிங்கம் ஐபிஎஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமாகி  இருந்தார் . பின்னர் இந்த படத்தை,

தொடர்ந்து இதய திருடன் ,சபரி ,நான் அவனில்லை, பெரியார் ,அறையில் 35 ல் கடவுள் , வெடிகுண்டு முருகேசன் போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில்தான் அதிகம் நடித்திருக்கிறார் .

இதனிடையே திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான ஜோதிர்மயி பின்னர் இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார்.  பார்ப்பதற்கு நம்முடைய பக்கத்து வீட்டு பெண் போல் இருந்த ஜோதிர்மயி சமீபகாலமாக மொட்டை அடித்துக் கொண்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு,

உள்ளாக்கினார் . அது மட்டுமல்லாமல் தற்போது ஜோதிர்மயி வயதான தோற்றத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.  இதை பார்த்த ரசிகர்கள் தலைநகரம் பட நடிகைக்கு என்ன ஆச்சு.?  இப்படி மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *