ஆர் எஸ் சிவாஜி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். நடிகரும் , தயாரிப்பாளருமான எம் ஆர் சந்தானத்தின் மகனான ஆர் எஸ் சிவாஜி எண்பதுகளில் இருந்தே நடித்துக் கொண்டு வருகிறார். குறிப்பாக இவர் கமலுடன் இணைந்து விக்ரம், சத்யா ,அபூர்வ சகோதரர்கள் ,மைக்கேல் மதன காமராஜன், குணா ,கலைஞன் ,மகளிர் மட்டும் ,அவ்வை சண்முகி ,பம்மல் கே சம்பந்தம்,அன்பே சிவம் , உன்னைப்போல் ஒருவன்,
என்று பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . மேலும் இவர் நடிகர் மட்டுமல்லாமல் உதவி இயக்குனர் , சவுண்ட் டிசைனர் மற்றும் லைன் ப்ரொடியூசர் ஆவார். அதுவும் இவர் தமிழ் படங்களில் குணச்சித்திர வேடம் , காமெடி வேடம் என்றுதான் தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்தார். அதுவும் அப்போது,
இவருடைய காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது . இப்படி இருக்கும் நிலையில் 66 வயதான நடிகர் ஆர் எஸ் சிவாஜி இன்று உடல்நிலை குறைவால் இறந்துவிட்டாராம். இவருடைய திடீர் மறைவு தமிழ் சினிமாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது…