சமீபகாலமாக அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்ற பேச்சு பரபரப்பாக நிலவி வருகிறது. இதற்கு என்ன விளக்கமும் கொடுக்காமல் இருந்து வந்தவர் சமீபத்தில் தன்னுடைய ஜெயிலர் படத்தின் பாடல் மூலம் பதிலடி கொடுத்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . இப்படி இருக்கும் நிலையில் விஜய்யை காலி பண்ணுவதற்காக அஜித்துடன் சேர்ந்து இப்படி ஒரு விஷயத்தை செய்ய உள்ளாராம் ,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .அந்த வகையில் ஆரம்பக் காலகட்டங்களில் இருந்து தற்போது வரை அஜித்துக்கும் , விஜய்க்கும் இருக்கும் போட்டிகள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இதனால் அவருடைய சக போட்டியாளரான அஜித்தை வைத்து விஜய்யை காலி பண்ண திட்டம் தீட்டியுள்ளாராம் சூப்பர் ஸ்டார் .
அது என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது . இந்நிலையில் இந்த படத்தில் அஜித்திற்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுக்க சொல்லி ,
லோகேஷுக்கு யோசனை ஒன்றை சொல்லி இருக்கிறாராம் ரஜினிகாந்த். மேலும் நடிக்க மாட்டேன் என்று சொல்லிய நடிகர்களை கூட தன்னுடைய படங்களில் நடிக்க வைக்கும் லோகேஷுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் . அது மட்டுமில்லாமல் சமீபத்திய பேட்டி ஒன்றிலும் அஜித்துடன் இணைவேன் ,
என்று கூறியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . இதனால் இந்த திட்டம் மட்டும் சரியாக வந்தால் விஜய்யை காலி செய்யலாம் என்ற முடிவில் இருக்கிறாராம் ரஜினிகாந்த் .இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …