தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை திரிஷா. மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய திரிஷா தற்போது வரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதோடு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்து வருகிறார் நடிகர் திரிஷா . மேலும் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் ,
திரைப்படத்தில் குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகை திரிஷா . இதன் பிறகுதான் இவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது . அந்த வகையில் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் ,
நடிகை திரிஷா . இதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி படத்திலும் நடிக்க இருக்கிறாராம் நடிகை திரிஷா . இப்படி இருக்கும் நிலையில் தம்பி வயது நடிகர் உடன் திரிஷா ஜோடி சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேறு யாருமில்லை பிரபல மலையாள நடிகரான ,
டோவினோ தாமஸ் தான் . மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வரும் நடிகர் டோவினோ தாமஸ் தற்போது ஐடென்டிட்டி என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். இந்தப் படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க உள்ளதாக,
தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் திரிஷாவுக்கும் , டோவினோ தாமசிக்கும் இடையே ஆறு வயது வித்தியாம் உள்ளதாம் . அப்படி இருக்கும் போது இவருடன் திரிஷா எப்படி நடிக்க சம்மதித்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…