இயக்குனர் ஷங்கர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். குறிப்பாக இவருடைய ஒவ்வொரு திரைப்படங்களும் பிரம்மாண்டத்தின் உச்சகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்பட்டு வருகிறார் இயக்குனர் ஷங்கர் . மேலும் தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை ,
கொடுத்த இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் . இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் தொடங்கியது . இந்த படத்தில் கமலுடன் இணைந்து காஜல் அகர்வால் ,
சித்தார்த் , ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா என்று ஒரு முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டு வருகின்றனர் . மேலும் விக்ரம் படத்திற்கு பிறகு கமலுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில்,
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறதாம் . இந்த நேரத்தில் இந்தியன் 2 படத்தில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகளை கமல் பார்த்தாராம் . அதைப் பார்த்ததும் ஆடிப் போய்விட்டாராம் . அந்த அளவிற்கு தரமாக இயக்கியிருக்கிறாராம் இயக்குனர் ஷங்கர் .இதனால் அவரைப் பாராட்டும்,
விதமாக ஒரு வாட்ச் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார் கமல் . தற்போது அந்த வாட்சின் விலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் ஷங்கருக்கு கமல் கொடுத்த வாட்சின் விலை 15 லட்சம் மதிப்புடையதாம் . இதை பார்த்த ரசிகர்கள் ஒரு வாட்சின் விலை இத்தனை லட்சமா என்று கூறி வருகின்றனர்…