தமிழ் சினிமா உலகில் கடந்த 205 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தான் சந்திரமுகி . இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரஜினி , நயந்தாரா , பிரபு , ஜோதிகா , நாசர் , வடிவேலு போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . மேலும் இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை ,
ச மீபத்தில் தொடங்கினார் இயக்குனர் பி வாசு. இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார் . அதோடு இவருடன் இணைந்து கங்கனா ரனாவத் ,வடிவேலு ,ராதிகா, லட்சுமிமேனன் ,மகிமா நம்பியார் போன்ற பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.
லைக்கா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாம் . இப்படி இருக்கும் நிலையில் லைக்கா நிறுவனம் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது .
அந்த வகையில் ஆயுத பூஜை அல்லது தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், அந்த நாளில் பெரிய படங்கள் வெளியாவதால் சந்திரமுகி 2 திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை குறிவைத்து வெளியாக இருக்கிறதாம் .
மேலும் இந்தத் திரைப்படம் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளிலும் வெளியாக இருக்கிறது . இதனால் மீண்டும் சந்திரமுகியை பார்ப்பதற்கு ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்…