உதயநிதி ஸ்டாலின் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . ஆரம்பத்தில் தயாரிப்பாளராக படங்களை தயாரித்து வந்த உதயநிதி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் ,நண்பேண்டா ,மனிதன் ,நிமிர், கண்ணே கலைமானே ,
நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின் . அதனால் மாமன்னன் படத்தோடு தன்னுடைய திரை பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்து இருந்தார் .
அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு, பகத் பாசில் ,கீர்த்தி சுரேஷ், லால் ,விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .மேலும் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம் என்பதாலும். இயக்குனர் மாரி செல்வராஜின்,
படம் என்பதாலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இப்படி இருக்கும் நிலையில் நேற்று வெளியான இந்த திரைப்படம் உதயநிதி ஸ்டாலின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட ஆறு கோடிக்கு மேல் ,
வந்ததாக கூறப்படுகிறது. இதுவரைக்கும் உதயநிதி நடித்த எந்த படத்திற்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கவில்லையாம் . இதனால் தன்னுடைய கடைசி படம் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்று சந்தோஷத்தில் இருந்து வருகிறாராம் உதயநிதி ஸ்டாலின்…