May 3, 2024

அர்ஜுனின் மகள் கொடுத்து வைத்தவர் ..!! வருங்கால மனைவியின் பிறந்தநாளை ..!! மறக்கமுடியாத பிறந்தநாளாக மாற்றிய தம்பி ராமையாவின் மகன் ..!!

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் கலக்கிக்கொண்டு வருபவர் நடிகர் தம்பி ராமையா . இவருடைய மகன் தான் உமாபதி ராமையா.  கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ஆதங்கப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் உமாபதி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மணியார் குடும்பம் ,திருமணம் ,தண்ணீ வண்டி ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகர் உமாபதி  . ஆனால் இவருக்கு எந்த படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத்தரவில்லை.  இதன் பிறகு அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ,

பிரபலமானார் உமாபதி . அந்த நேரத்தில் தான்  அர்ஜுன் உடன் பழக்கம் ஏற்பட்டு அவருடைய மகள் மீது காதல் வயப்பட்டார் உமாபதி . மேலும் பல நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதை அடுத்து விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . இப்படி இருக்கும் நிலையில் நேற்று பிறந்த நாளை கொண்டாடியிருந்த ஐஸ்வர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்த நாளாக மாற்றி இருக்கிறார் உமாபதி . அந்த வகையில் தன்னுடைய வருங்கால மனைவிக்கு ,

பல சர்ப்ரைஸ்களை கொடுத்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார் உமாபதி  . அந்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . இதோ அந்த  புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *