April 30, 2024

தற் கொலை க்கு மு யன்ற நடி கர் அப் பா ஸ் ..!! அடக் கொடு மையே , இவ ரின் வாழ்க் கை யில் இ த்த னை சோ கங்க ளா ..?? வெளி வந் த ஷாக் கிங் தக வ ல் ..!!

90 களில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தவர் தான் நடிகர் அப்பாஸ்.  ஆரம்பத்தில் பாடலாக இருந்து வந்த அப்பாஸ் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விஐபி, படையப்பா ,சுயம்வரம் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ,மின்னலே, ஆனந்தம் ,பம்மல் கே சம்பந்தம் என்று ,

தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . ஆனால் இப்படி தவிர்க்க முடியாத நடிகராக  கலக்கி கொண்டு வந்த அப்பாஸுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.  இதன் பிறகு சினிமாவில் இருந்தால் சரியாக வராது என்று ,

சுதாரித்துக் கொண்ட அப்பாஸ் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டாராம் .  இந்நிலையில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான அனுபவங்களை பகிர்ந்து இருந்தார் அப்பாஸ்.  அந்த வகையில் பத்தாம் வகுப்பில் பெயில் ஆனதால் தற்கொலை செய்ய நினைத்தாராம்.  அதுமட்டுமில்லாமல் அவருடைய காதலியும் ,

இவரை விட்டு பிரிந்து விட்டாராம் . அந்த நேரத்தில் வண்டியில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தாராம் . ஆனால் அப்படி செய்தால் வாகனத்தை ஓட்டி வருபவருடைய வாழ்க்கையும் பாதிக்கும் என்பதால் அதை செய்யவில்லையாம் . மேலும் ஒரு படம் ஹிட்டான பிறகு தொடர்ச்சியாக ,

தோல்வி படங்களை சந்தித்ததால் பணரீதியாகவும் பல பிரச்சினைகளை சந்தித்தாராம்.  இதனால் ஒரு கட்டத்தில் சினிமா மீது வெறுப்பு வந்த காரணத்தினால் தான் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆனதாக கூறியிருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் இவருடைய வாழ்க்கையில் இத்தனை சோகங்களா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *