April 28, 2024

ஒரு தொட்டியில் இரண்டு செடிகள் ..!! 23 வது திருமண நாளில் கணவருடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த ராதிகா ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ராதிகா . பழம்பெரும் நடிகரான  எம் ஆர் ராதாவின் மகளான ராதிகா பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை ராதிகா .

இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகரும் ,  இயக்குனருமான பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் . பின்னர் சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்த ராதிகா பின்னர் ரிச்சர்ட் என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டார் .

அவரையும் சில வருடங்களிலேயே விவாகரத்து செய்த ராதிகா கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.  மேலும் சரத்குமாரும் , ராதிகாவும் இணைந்து நம்ம அண்ணாச்சி, ரகசிய போலீஸ், சூர்யவம்சம் போன்ற பல படங்களில் ,

ஒன்றாக நடித்திருந்தனர் . அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது . இதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் தங்களுடைய 23வது திருமண நாளை முன்னிட்டு,

தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ராதிகா.  இதை பார்த்த ரசிகர்கள் சரத்குமாருக்கும் , ராதிகாவுக்கும் திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *