April 25, 2024

வி ஜே ரக்‌ஷனுக்கு கல்யாணம் ஆயிருச்சா .? இவருக்கு இவ்வளவு பெரிய மகளா..?? முதல் முறையாக வெளியான குடும்ப புகைப்படங்கள் ..!!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகர்களாக மாறியவர்கள் ஏராளம் உண்டு.  அந்த வகையில் சிவகார்த்திகேயன் , மாகாபா ஆனந்த் ,ரியோ ராஜ் போன்ற பல பிரபலங்களை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் வி ஜே ரக்‌ஷன்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் வி ஜே வி ஜே ரக்‌ஷன்.

பின்னர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ரெடி ஸ்டெடி போ, குக் வித் கோமாளி ,காமெடி ராஜா கலக்கல் ராணி, போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார் . இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது . அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ,

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் .  இதை அடுத்து மறக்குமா நெஞ்சம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார் . இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி,

வரும் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார் வி ஜே ரக்‌ஷன்.  மேலும் பலரும் விஜய் ரக்‌ஷனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . ஆனால் அவருக்கு திருமணமாகி ஆறு, ஏழு வயதில் ஒரு மகளே இருக்கிறாராம் .  இப்படி இருக்கும் நிலையில்,

முதல் முறையாக தன்னுடைய குடும்ப புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விஜே ரக்‌ஷன். இதை பார்த்த ரசிகர்கள் வி ஜே ரக்‌ஷனுக்கு கல்யாணம் ஆயிருச்சா .? இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *