April 22, 2024

வெளி நாட்டு மாப்பி ள்ளை தா ன் வே ண்டும் என் று ..!! அட ம்பிடித் து திரும ணம் செய்து கொண் ட 7 நடி கை கள் ..!! லிஸ்ட் டில் இந் த நடிகை யும் உள் ளா ரா ..??

பொதுவாகவே தமிழ் சினிமாவில் உள்ள பெரும்பாலான நடிகைகள் மார்க்கெட் குறைந்ததும் திருமணம் ஆகி செட்டில் ஆகிவிடுவார்கள்.  அப்படி திருமணம் செய்து கொண்டால் வெளிநாட்டு மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம் பிடித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகளின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.  இதில் முதலாவதாக உள்ளவர் நடிகை லைலா .

கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான கள்ளழகர் என்ற படத்தின் மூலமா அறிமுகமான லைலா தொடர்ந்து முதல்வன் , தீனா , தில், மௌனம் பேசியதே , பிதாமகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு மேக் டி என்ற இராணி தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். 

இவரை தொடர்ந்து மற்றொரு நடிகை தான் ரிச்சா.  தமிழில் வெளியான மயக்கம் என்ன என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஒஸ்தி படத்திலும் நடித்திருந்தார்.  இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜோ லாங்கிலா என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார் .

இவரை தொடர்ந்து மற்றொரு நடிகை தான் ஸ்ரேயா . உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரேயா தொடர்ந்து மழை, திருவிளையாடல் ஆரம்பம் ,சிவாஜி ,அழகிய தமிழ் மகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் .இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது,

கடந்த 2018 ஆம் ஆண்டு அன்ட்ரி கொச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.  மேலும் இவர்கள் மட்டுமல்லாமல் இந்த லிஸ்டில் பிரியங்கா சோப்ரா, அம்பிகா, ராதிகா , அனுஹாசன் போன்ற பல நடிகைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *